வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி


வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 March 2019 10:18 PM GMT (Updated: 17 March 2019 10:18 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில், கோவில் பின்பகுதியில் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற முருகன்கோவில் உள்ளது. கோவில் பின்பகுதியில் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

தேங்கி கிடக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பதில்லை. குப்பைகளை அகற்றாமல் அங்கேயே தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்பட அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த குப்பைகளை தீயிட்டு எரிக்காமல் அகற்ற வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story