பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுக்கு ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் நடிகை சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர் பட்டியலுக்கு ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் வழங்கியது. நடிகை சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், முன்னாள் முதல்-மந்திரிகள் சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி, எம்.பி.க்கள் நளின்குமார் கட்டீல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரவிந்த் லிம்பாவளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தயாரித்துள்ளது. விரிவான விவாதத்திற்கு பிறகு அந்த பெயர் பட்டியலுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
எடியூரப்பா மற்றும் மாநில தலைவர்கள் இந்த வேட்பாளர் பட்டியல் குறித்து டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை இன்றோ(நேற்று) அல்லது நாளையோ (இன்று) சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள்.
இந்த வேட்பாளர் பட்டியல், எங்கள் கட்சியின் தேசிய தேர்தல் குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். வேட்பாளர்கள் பட்டியலை, எங்கள் கட்சியின் தேர்தல் குழு வெளியிடும்.
மண்டியா தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது நடிகை சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சுமலதாவின் முடிவை பொறுத்து, எங்கள் கட்சியின் தேசிய தேர்தல் குழு இறுதி முடிவை எடுக்கும்.
எடியூரப்பாவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.மஞ்சு நேரில் சந்தித்து, பா.ஜனதாவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் கட்சியில் இணையும் நிகழ்வு விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அரவிந்த் லிம்பாவளி கூறினார்.
பா.ஜனதா உத்தேச வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:-
1. பெங்களூரு தெற்கு - தேஜஸ்வினி அனந்தகுமார்
2. பெங்களூரு வடக்கு - மத்திய மந்திரி சதானந்தகவுடா
3. பெங்களூரு மத்திய தொகுதி - பி.சி.மோகன் எம்.பி.
4. பெங்களூரு புறநகர் - சி.பி.யோகேஷ்வர் அல்லது ருத்ரேஷ்
5. மைசூரு-குடகு - பிரதாப் சிம்ஹா
6. சாம்ராஜ்நகர் - சீனிவாச பிரசாத்
7. சிக்பள்ளாப்பூர் - பச்சே கவுடா
8. கோலார் - டி.எஸ்.வீரய்யா அல்லது சலவாதி நாராயணசாமி
9. துமகூரு - பசவராஜ்
10. ஹாசன் - ஏ.மஞ்சு (காங்கிரசை சேர்ந்த இவர், விரைவில் பா.ஜனதாவில் இணைகிறார்)
11. மண்டியா - சித்தராமையா அல்லது நடிகை சுமலதாவுக்கு ஆதரவு
12. சித்ரதுர்கா - மானப்பா வஜ்ஜல் அல்லது லட்சுமி நாராயணா
13. சிவமொக்கா - பி.ஒய்.ராகவேந்திரா
14. தாவணகெரே - ஜி.எம்.சித்தேஸ்வர்
15. உடுப்பி-சிக்கமகளூரு - ஷோபா
16. தட்சிண கன்னடா - நளின்குமார் கட்டீல்
17. உத்தர கன்னடா - மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே
18. சிக்கோடி - ரமேஷ் கட்டி அல்லது பிரபாகர் கோரே
19. பெலகாவி - சுரேஷ் அங்கடி
20. தார்வார் - பிரகலாத் ஜோஷி
21. ஹாவேரி - சிவக்குமார் உதாசி
22. பல்லாரி - வெங்கடேச பிரசாத் அல்லது தேவேந்திரப்பா
23. கொப்பல் - கரடி சங்கண்ணா
24. பாகல்கோட்டை - கத்திகவுடர்
25. விஜயாப்புரா - ரமேஷ் ஜிகஜினகி
26. பீதர் - பகவந்த் கூபா
27. கலபுரகி - உமேஷ் ஜாதவ்
28. ராயச்்சூர் - ஹனுமப்பா நாயக் அல்லது திப்பராஜூ.
இந்த நிலையில் நேற்று மாலையில் எடியூரப்பா வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Tags :
Next Story