கச்சிராயப்பாளையம், தியாகதுருகம் பகுதியில் - கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கச்சிராயப்பாளையம், தியாகதுருகம் பகுதியில் - கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 March 2019 9:45 PM GMT (Updated: 17 March 2019 11:57 PM GMT)

கச்சிராயப்பாளையம், தியாகதுருகம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மல்லிகைபாடி கிராமத்தில் புதுப்பாலப்பட்டு கால்நடைத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதற்கு கால்நடைத்துறை மண்டல இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ராஜா, கால்நடை ஆய்வாளர் ஜவஹர்லால் நேரு மற்றும் சிங்காரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடைத்துறையினர் கலந்து கொண்டனர். இதேபோல் பரங்கிநத்தம் கிராமத்திலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கால்நடைத்துறை சார்பில் சிறுநாகலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி கால்நடைத்துறை உதவி இயக்குனர் ராஜா மேற்பார்வையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கூத்தக்குடி கால்நடைத்துறை உதவி மருத்துவர் ஜெயபால், செயற்கை முறை கருவூட்டாளர், திருமேனி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவபெருமான் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.

இதேபோல் வேளாக்குறிச்சி கிராமத்தில் கால்நடை உதவி மருத்துவர் பேபிஉஷா தலைமையிலும், பல்லகச்சேரியில் கால்நடை உதவி மருத்துவர் பெருமாள் தலைமையிலும், கண்டாச்சிமங்கலத்தில் கால்நடை உதவி மருத்துவர் நிறைமொழி தலைமையிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

Next Story