கச்சத்தீவு திருவிழா முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்


கச்சத்தீவு திருவிழா முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
x
தினத்தந்தி 18 March 2019 3:00 AM IST (Updated: 18 March 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு திருவிழா முடிவடைந்த நிலையில் ராமேசுவரம் தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.விசைப்படகு மீனவர்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராமேசுவரம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழவையொட்டி கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது.இந்த தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும், விசைப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தன.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழா முடிவடைந்த நிலையில் ராமேசுவரம்,பாம்பன் பகுதிகளில் இருந்து நேற்று 700-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு களில் சுமார் ஆயிரம் மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர்.இதே போல் பாம்பன் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செனற்னர். மீன் பிடிக்க சென்றுள்ள இந்த மீனவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) கரை திரும்புவார்கள்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அது போல் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் 2 மாணவர்களையும் அனைத்து படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே அனைத்து விசைப் படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னரே மீண்டும் கடலுக்கு செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தெரிவித்தார்.

Next Story