பண பட்டுவாடா நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
பண பட்டுவாடா நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உட்கோட்ட எல்லையில் உள்ள போலீசாருக்கு தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-
தேர்தலுக்கு முன்பு தீவிரமான வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் பண பட்டுவாடா நடக்காமல் கண்காணிக்க வேண்டும். மேலும் சுவர் விளம்பரங்கள், வாகனங்களில் கட்டப்படும் கொடிகள் குறித்தும் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். வேட்பு மனு தாக்களின் போது வரும் வாகனங்கள், வேட்பாளர்களுடன் நான்கு பேர் அனுமதி ஆகியவற்றை பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் அன்று மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க தகுந்த பாதுகாப்புகளை வழங்க வேண்டும். பின்னர் வாக்களிப்பு முடிந்த உடன் வாக்குப் பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். வாக்கு எண்ணும் வரை அந்த மையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். வாக்கு எண்ணும் நாள் அன்று உரிய பாதுகாப்பு அளித்து எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி, மகராஜகடை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி ஆகிய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story