சென்னை தனியார் விடுதியில் கடலூரை சேர்ந்த தொழிலாளி மர்ம சாவு; மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்தாரா?
மலேசியாவில் இருந்து சென்னை வந்த கடலூரை சேர்ந்த தொழிலாளி தனியார் விடுதியில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார்.
சென்னை,
கடலூரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ‘வெல்டிங்’ வேலை செய்து வந்தார். அங்கு ‘வெல்டிங்’ எந்திரத்தில் மாட்டி கையில் காயம் ஏற்பட்டதால் சிவக்குமார் உடனடியாக தமிழகம் திரும்ப முடிவு செய்தார்.
இதற்காக மலேசிய விமான நிலையம் வந்தபோது சிவக்குமாரிடம் அவரது நண்பர் ஒருவர் 150 கிராம் தங்கச்சங்கிலியை கொடுத்து, சென்னையில் உள்ள உறவினரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் மலேசியா விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்த சிவக்குமார், அந்த தங்கச்சங்கிலியை விமான நிலையத்திலேயே யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி வீசியதாக தெரிகிறது. பின்னர் விமானம் மூலம் நேற்று முன்தினம் காலையில் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் மலேசிய நண்பரின் உறவினர்கள் 2 பேர் சிவக்குமாரிடம் வந்து 150 கிராம் தங்கச்சங்கிலி குறித்து கேட்டுள்ளனர். அப்போது சிவக்குமார் மலேசிய விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து தங்கச்சங்கிலியை தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.
சிவக்குமாரின் பதிலால் சந்தேகமடைந்த மலேசிய நண்பரின் உறவினர்கள், அவரை விமான நிலையத்தில் இருந்து திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர். மேலும் அங்கும் தங்கச்சங்கிலி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மலேசிய நண்பரின் உறவினர்கள் இருவரும் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது சிவக்குமார் தங்கியிருந்த அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதி நிர்வாகத்திடம் தெரிவித்த அவர்கள், அறையின் கதவை திறந்து பார்த்தபோது அங்கு சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விடுதி நிர்வாகத்தினர் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மலேசிய நண்பரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிவக்குமார், திரைப்படங்களில் வருவது போல தங்கம் கடத்தும் ‘குருவி’யாக செயல்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story