மொபட் மீது அரசு பஸ் மோதல்: கணவர் கண் எதிரே மனைவி பலி


மொபட் மீது அரசு பஸ் மோதல்: கணவர் கண் எதிரே மனைவி பலி
x
தினத்தந்தி 19 March 2019 4:00 AM IST (Updated: 19 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் ஜாபர் அலி(வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பர்சனா(25). நேற்று மதியம் கணவன்–மனைவி இருவரும் மீன் வாங்குவதற்காக வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு மொபட்டில் வந்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் கோயம்பேட்டில் இருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பஸ், மொபட் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த பர்சனா, கணவர் கண் எதிரே பரிதாபமாக இறந்தார். ஜாபர் அலி காயமின்றி உயர் தப்பினார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் காந்தி(39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மணலி புதுநகர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் முரளி(45). இவர், திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள இரும்பு கடையில் அங்கேயே தங்கி, வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுதீர்குமார் (40) என்பவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் ஜோதிநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். முரளி மீது வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சுதிர்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கொளத்தூரைச் சேர்ந்த பாரத் (25) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story