புனே விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்


புனே விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்
x

புனே விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

புனே,

துபாயில் இருந்து புனே விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். இதில், அவர் ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து சுங்க துறையினர் ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், தங்கத்துடன் பிடிபட்டவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது நகிப் சபீர் ஹசன் என்பது தெரியவந்தது. அவரிடம் விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story