தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 8:07 PM GMT)

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், இன்று(நேற்று) முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கி உள்ளதால் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்களை முழுமையாக பெற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கடந்த முறை குறைவான வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குபவர்களின் விவரங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுங்கச்சாவடிகள் ஆகியவற்றை கண்காணித்திடவும், பொதுமக்களிடம் இருந்து தேர்தல் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் நாடாளுமன்ற தேர்தல் பணியினை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என்றார். கூட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story