மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது + "||" + Parliamentary elections 750 people arrested in Chennai

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,

சென்னையில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவுபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 750 பேரை கைது செய்துள்ளோம். சென்னையில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.


சென்னையில் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 4 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். அடுத்தகட்டமாக மேலும் 16 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வருவார்கள்.

சென்னையில் முறையாக அனுமதி பெற்று 2,700 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கிகளை திருப்பி ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை 1,230 துப்பாக்கிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் இந்த துப்பாக்கிகள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்படும். தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகள் மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் சென்னை முழுவதும் இரவு, பகலாக ரோந்து சுற்றி வருகிறார்கள். பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.10 லட்சமும், 4½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கி கடன் மோசடி வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகன் அமலாக்க துறையால் கைது
வங்கி கடன் மோசடி வழக்கில் மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மருமகன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
2. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது
கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியார் கொலை மருமகன் கைது
முக்கொம்பு அருகே மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
4. நாகர்கோவிலில் துணிகரம் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை பறிப்பு இளம்பெண் கைது
நாகர்கோவிலில் தோழிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகையை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5. தக்கலை அருகே தகராறை விலக்கி விட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து ரவுடி கைது
தக்கலை அருகே தகராறை விலக்கி விட்ட பா.ஜ.க. நிர்வாகிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ரவுடியை போலீசார் கைது செய்தனர்.