சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை
சென்னையில் பிடிபட்ட பிரபல ரவுடி பினுவிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
கடந்த ஆண்டு மாங்காடு அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரவுடி பினு (வயது 48). சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வழக்கில் ரவுடி பினு கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த ரவுடி பினுவை போலீசார் எச்சரிக்கை செய்தனர். அசம்பாவித செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று அவருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் பெரிய ரவுடிகள் 80 பேரை போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளனர்.
தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள ரவுடிகளில் பினுவும் ஒருவர். நேற்று முன்தினம் இரவு எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் எழும்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு வந்த வெள்ளை நிற காரை போலீசார் நிறுத்தினார்கள். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. காரை விரட்டிச்சென்ற போலீசார் அதை மடக்கினார்கள். காருக்குள் 3 பேர் இருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தார்கள்.
போலீஸ் விசாரணையில் அவர்களில் ஒருவர் ரவுடி பினு என்று தெரியவந்தது. மற்ற இரண்டு பேரும் ரவுடி பினுவின் கூட்டாளிகள் ஆவார்கள். சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கு ஏற்கனவே ரவுடி பினு நன்கு அறிமுகமானவர். இதனால் அவர் ரவுடி பினுவை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார்.
எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தனது மனைவியின் அக்காள் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக ரவுடி பினு கூறினார்.
இருந்தாலும் அவர் ஏற்கனவே தனது நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தோடு காரில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. தீவிர விசாரணைக்கு பிறகு பினு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story