ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ரெங்கசாமி மூப்பனார் மரணம் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
ஜி.கே.மூப்னாரின் சகோதரர், ஜி.ரெங்கசாமி மூப்பனார் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.ரெங்கசாமி மூப்பனார்(வயது 86). மறைந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஆவார். இவர், த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர், திருவையாறு தியாக பிரம்ம சபை தலைவராகவும், கும்பகோணம் நாட்டியாஞ்சலி விழாக்குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜி.ரெங்கசாமி மூப்பனார் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 15 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் வீட்டில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ஜி.ரெங்கசாமி மூப்பனார் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இல்லத்தில் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரபெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று(புதன்கிழமை) மாலை 5 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு, பின்னர் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஜி.ரெங்கசாமி மூப்பனாரின் மறைவுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story