தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழக அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுகிறது என ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.
ஈரோடு,
ஈரோட்டில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக அரசை பொறுத்தவரை ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது. சாயக்கழிவு, சாலை வசதி, பாதாள சாக்கடை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பெருந்துறை ரோட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கனி மார்க்கெட்டில் வியாபாரிகள் கோரிக்கைக்கு ஏற்ப 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் புதிதாக கட்டி கொடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story