கோடையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுக்கு அறிவுரை
கோடையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையாளர் சிவகுமார் பேசும்போது, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் சீரான குடிநீர் வினியோகம் வழங்கவும், குழாய் ஆய்வாளர்கள் அவ்வப்போது மாநகரில் ஏற்படும் குழாய் உடைப்புகளை சரி செய்து பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்யவும் உதவி பொறியாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். கூடுமான வரை தண்ணீர் வீணாவதை தடுத்து அவ்வப்போது ஒவ்வொரு மண்டலங்களில் பணிபுரியும் உதவி பொறியாளர்கள் மற்றும் குழாய் ஆய்வாளர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து குடிநீர் வினியோகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும்.
மின்னழுத்த குறைபாடுகளை கண்டறிந்து மின்வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சீரான குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர் திருமுருகன், மண்டல உதவி ஆணையாளர்கள் செல்வநாயகம், வாசுகுமார், முகமது சபியுல்லா, கண்ணன், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், குழாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story