வானவில் : டேவியாலெட் பான்டம் ரியாக்டர்
ரியாக்டர் என்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது அணு உலைகளில்தான். ஆனால் அதிரவைக்கும் இசையை வழங்கும் இந்த ஸ்பீக்கருக்கு பான்டம் ரியாக்டர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த டேவியாலெட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மிக அழகிய வடிவில் இந்த ஸ்பீக்கரை உருவாக்கியுள்ளது. முட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் மிக துல்லியமான இசையை வெளிப்படுத்தும். மிகுந்த இடத்தை அடைத்துக் கொள்ளாத வகையில் புத்தக அலமாரியில் வைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் இது ஒலியை உமிழும்போது மிகப் பெரிய இசை அரங்கையே அதிரும் வகையில் இசையை வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. இது 4,500 வாட் ஒலியை உமிழும். இதன் விலை ரூ.99 ஆயிரமாகும். இது 4.3 கிலோ எடை கொண்டது. இதனால் இதை தேவையான இடத்திற்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.
Related Tags :
Next Story