வானவில் : வசதியாக படுக்க உதவும் ‘யாசா ஸ்மார்ட் பெட்’
நாள் முழுதும் வேலை பார்த்துவிட்டு வருபவர்களுக்கு வீட்டுக்குள் மெத்தையில் சாய்ந்தால் போதும் என்றிருக்கும்.
சர்வமும் ஸ்மார்ட் மையமாக ஆகிப்போன இந்த காலத்தில் படுப்பதற்கும் ஸ்மார்ட் பெட் வந்துவிட்டது. இந்த மெத்தையின் பெயர் யாசா ஸ்மார்ட் பெட். இதன் சிறப்பம்சங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
படிப்பதற்கு, டி.வி. பார்ப்பதற்கு என்று நமக்கு தேவையானபடி படுக்கையை சரிசெய்து கொள்ளலாம். இந்த பெட் இருந்தால் கால்களுக்கு தனியாக தலையணை வைத்துக் கொள்ள வேண்டாம். கால்களை உயரமாக வைத்துக் கொள்ள இதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதனால் கால்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். குறட்டை விடுபவராக இருப்பின் இந்த மெத்தையில் தலையை சாய்வாக உயரத்தில் வைக்கும்படி படுத்தால் அதிலிருந்து விடுபடலாம். உடல் சோர்வை நீக்கி, காலையில் புத்துணர்வுடன் எழச்செய்கிறது இந்த பெட். யு.எஸ்.பி. சார்ஜர் பொருத்திக் கொள்ளும் வசதி இருப்பதால், தேவையான போது நமது ஸ்மார்ட் கருவிகளை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த மெத்தையை இயக்குவதற்கு வயர்லெஸ் ரிமோட்டும் இணைப்பாக வருகிறது. பெட்டின் அடியில் பொருட்கள் வைத்துக் கொள்ள வசதியாக நிறைய இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த மெத்தையின் விலை சுமார் ரூ.1,12,500.
Related Tags :
Next Story