வானவில் : செல்போன் அளவில் கணினி
என்னதான் செல்போன், டேப்லெட் என்று வந்துவிட்டாலும் சில வகையான அலுவலகத் தேவைகளுக்கு கணினியை உபயோகிப்பதே வசதியாக இருக்கும்.
கணினியின் எல்லா அம்சங்களையும் கொண்டு அதே சமயம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல போர்ட்டபிளாகவும் இருந்தால்? ஆம் அப்படி ஒரு கருவிதான் ஆக்கல் சிரியஸ் ஏ ( OCKEL SIRIUS A ).
ஒரு செல்போனின் அளவை கொண்டிருக்கும் இந்த கருவியில் நமக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இது இயங்கும். 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. என்று கணினியை போன்றே அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது ஆக்கல் சிரியஸ். நமது வீட்டிலிருக்கும் அனைத்து ஸ்மார்ட் கருவிகளையும் இத்துடன் இணைத்துக்கொள்ள முடியும். இந்த பாக்கெட் சைஸ் கருவியை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். பணியிடத்தில் இருக்கும் கணினியுடன் இணைத்து தேவையான தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் நமது தகவல்கள் வெளியே தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும். கணினி திரை மட்டுமின்றி எந்த வகையான திரையுடனும் இக்கருவியை இயக்கலாம்.
இல்லையேல் இதன் முன் இருக்கும் ஆறு அங்குல திரையில் நமக்கு தேவையான தகவல்களை பார்த்துக் கொள்ளலாம். இந்த சின்ன டிவைஸில் இரண்டு யு.எஸ்.பி. இணைப்புகள், ஹெ.டி.எம்.ஐ. கேபிள் பொருத்திக் கொள்ளும் வசதி, மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. வயருடனும், வயர்லெஸ்ஸாகவும் இரு விதமாகவும் இயங்கும் இந்தக் கருவியைக் கொண்டு உலகின் எந்த இடத்திலும் உட்கார்ந்து நாம் பணிபுரியலாம்.
Related Tags :
Next Story