மாவட்ட செய்திகள்

ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்: குறுந்தகடு வெளியீட்டு விழா டி.டி.வி.தினகரன்–கி.வீரமணி பங்கேற்பு + "||" + M.Nadarajan Memorial Day of the First Anniversary: DVV Thinakaran-K.Veramani Participation

ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்: குறுந்தகடு வெளியீட்டு விழா டி.டி.வி.தினகரன்–கி.வீரமணி பங்கேற்பு

ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்: குறுந்தகடு வெளியீட்டு விழா டி.டி.வி.தினகரன்–கி.வீரமணி பங்கேற்பு
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா தஞ்சை தமிழ் அரசி மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.
தஞ்சாவூர்,

புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா தஞ்சை தமிழ் அரசி மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.


விழாவில் ‘ம.நடராசன் வாழும் நினைவுகள்’ என்ற குறுந்தகட்டை முன்னாள் எம்.பி. எல்.கணேசன் வெளியிட சிங்கப்பூர் துணை பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த டாக்டர் ஜோஸ்வா பெற்றுக்கொண்டார். இதில் ம.சுவாமிநாதன், அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் ராஜன் நடராஜன், அ.ம.மு.க. அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் எம்.ரெங்கசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, கவிஞர் காசி ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பன்னீர்செல்வம், இந்திய தேசிய லீக் நிர்வாகி நிஜாமுதின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருதப்பா அறக்கட்டளை நிர்வாகி பழனிவேலு நன்றி கூறினார்.