வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு


வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 7:54 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏப்ரல் 18-ந் தேதி வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கிடைத்திட முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரெங்கநாதபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் தம்பிரான் பட்டி அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படவுள்ள வாக்குச் சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாய்தளத்துடன் கூடிய பாதை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் தொடர்புடைய அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

Next Story