வள்ளியூர் அருகே, 2 பேருக்கு அரிவாள் வெட்டு


வள்ளியூர் அருகே, 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 21 March 2019 3:38 AM IST (Updated: 21 March 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குளத்துகுடியிருப்பை சேர்ந்த தங்கபால் மகன் சுதேந்தர் (வயது 24). இவர் வள்ளியூரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்ககிருஷ்ணன் மருமகன் வடலிவிளையை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் இடையே தெருவில் மோட்டார் சைக்கிள் விடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சுதேந்தர் தனது உறவினர் ராஜகுமார் என்பவருடன் ஹவுசிங்போர்டு காலனி பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயகுமார், அவரது மைத்துனர் அலெக்ஸ் ஆகியோர் சுதேந்தரிடம் தகராறு செய்தனர். இதனை ராஜகுமார் தட்டிக் கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜகுமாரின் கைகளில் வெட்டினார். இதனை தடுத்த சுதேந்தரையும், ஜெயகுமார் வெட்டிவிட்டு அலெக்ஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து சுதேந்தர் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகுமார், அலெக்ஸ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story