தேர்தல் செலவின பார்வையாளர் சேலம் வருகை - கலெக்டருடன் ஆலோசனை


தேர்தல் செலவின பார்வையாளர் சேலம் வருகை - கலெக்டருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 21 March 2019 4:06 AM IST (Updated: 21 March 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணித்திடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராக தேவ் பிரகாஷ் பமனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் கான்ட்லா துறைமுகத்தில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையின் இணை ஆணையராக பணியாற்றி வரும் இவர் நேற்று சேலம் வந்தார். இதையடுத்து அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணியிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பயிற்சி கலெக்டர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் அறை எண்.4-ல் செலவின பார்வையாளர் தேவ் பிரகாஷ் பமனாவத் முகாம் அலுவலகம் உள்ளது. தேர்தல் செலவினங்கள் தொடர்பான புகார்களை அவருடைய செல்போன் எண்ணான 93852-86044-க்கும் மற்றும் முகாம் அலுவலக தொலைபேசி எண்ணான 0427-2311252-க்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story