வள்ளியூரில், 6 மாத குழந்தை மர்மசாவு -போலீசார் விசாரணை


வள்ளியூரில், 6 மாத குழந்தை மர்மசாவு -போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 March 2019 4:53 AM IST (Updated: 21 March 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் 6 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 27) நெசவு தொழிலாளி. அவருடைய மனைவி செல்வநாயகி (23). இவர்களுக்கு கதிரவன் என்ற ஆறு மாத ஆண் குழந்தை உள்ளது.

செல்வநாயகி நாங்குநேரியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் உதவி அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது பெற்றோருடன் நாங்குநேரியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் குழந்தை கதிரவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் குழந்தையை வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு செல்வநாயகியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் மர்மசாவு குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story