மாவட்ட செய்திகள்

திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதல்; வாலிபர் பலி + "||" + Scooters collision near Mondays; Young man killed

திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதல்; வாலிபர் பலி

திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதல்; வாலிபர் பலி
திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை,

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கசாமி. இவருடைய மகன் ஜெனிஷ் (வயது 27), கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு நெய்யூர் அருகே வட்டத்தில் இருந்து முத்தலக்குறிச்சி நோக்கி ஜெனிஷ் சென்று கொண்டிருந்தார்.வட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவரான கோபு (40), அஜின் (29) ஆகியோர் வந்த மற்றொரு ஸ்கூட்டர் மோதியது. இதில் 2 ஸ்கூட்டர்களில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஜெனிஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கோபு, அஜின் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெனிசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி
கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
2. துறையூர் அருகே கோவில் விழாவுக்கு சென்றபோது பரிதாபம் கிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (வயது 63). இவர் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
3. காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
காங்கேயம் அருகே சிமெண்டு கலவை எந்திர வாகன சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
4. சீனாவில் கப்பல் மூழ்கி 7 பேர் சாவு
சீனாவில் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.
5. தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி
தஞ்சை அருகே கோவில் விழாவில் பங்கேற்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.