விழுப்புரம் கோவில் திருவிழாவில், அன்னதானம் வாங்கச்சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


விழுப்புரம் கோவில் திருவிழாவில், அன்னதானம் வாங்கச்சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 21 March 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கோவில் திருவிழாவில் அன்னதானம் வாங்கச்சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் ரெயில்வே நிலைய தெருவை சேர்ந்தவர் கபாலி மனைவி லல்லி (வயது 48). இவர் நேற்று காலை விழுப்புரம் முத்தாம்பாளையம் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலை சுற்றியுள்ள பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு அன்னதானம் வாங்கி சாப்பிடுவதற்காக லல்லி சென்றார்.

அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர், லல்லியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story