அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்கள் சிங்கப்பூரில் வசிக்கும் கிராம இளைஞர்கள் வழங்கினர்


அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்கள் சிங்கப்பூரில் வசிக்கும் கிராம இளைஞர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 6:59 PM GMT)

மன்னார்குடி அருகே அரசு பள்ளிக்கு சிங்கப்பூரில் வசிக்கும் கிராம இளைஞர்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிங்கப்பூரில் வசிக்கும் காரிக்கோட்டை கிராமத்தை சோந்த இளைஞர்கள் சார்பில் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியை பாப்பாத்தி வரவேற்றார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் அன்புராணி கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை கிராமத்தில் உள்ள பெத்தபெருமாள் கோவிலில் இருந்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். முடிவில் ஆசிரியை தமிழ்மலர் நன்றி கூறினார். இதில் பள்ளி குழந்தைகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் வாழ் கிராம இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Next Story