சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 7:11 PM GMT)

சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குத்தாலம்,

குத்தாலம் அருகே திருவாவடுதுறை மாம்புள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 33). குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர்கள் 2 பேரும் தொடர்ந்து சாராயம் விற்றதால் குத்தாலம் போலீசார், அவர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது சாராய விற்பனை வழக்கு மற்றும் சாராயம் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சாமிநாதன், சிறையில் உள்ள சாராய வியாபாரிகள் பாஸ்கர், ராமலிங்கம் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதனை ஏற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சாராய வியாபாரிகள் பாஸ்கர், ராமலிங்கம் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை குத்தாலம் போலீசார் எடுத்து சென்று திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டிடம் கொடுத்தார்.

Next Story