இதுவரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை: கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது


இதுவரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை: கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 22 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யாததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். இதுவரை மொத்தம் 46 பேர் வேட்புமனுக்களை வாங்கி சென்று உள்ளனர். ஆனால் ஒருவர் கூட இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

போலீசார் வழக்கம் போல் அங்கு வந்த சில வாகனங்களை பரிசோதனை செய்து அனுப்பினர். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் வேறு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவில்லை. நேற்று கலெக்டர் அலுவலகம் ஆளே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story