மாவட்ட செய்திகள்

கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு + "||" + Sexual complaint in college: arrester, 2 professors in jail

கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு

கல்லூரியில் பாலியல் புகார்: கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைப்பு
பூதப்பாண்டி பகுதி கல்லூரியில் எழுந்துள்ள பாலியல் புகாரின் பேரில் கைதான தாளாளர், 2 பேராசிரியைகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் தாளாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.


இதுகுறித்து பேராசிரியை தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் மற்றும் ஊழியர்கள் பேராசிரியையின் உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் 2 பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் 2 பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளியணையில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் கடைகள் அடைப்பு
வெள்ளியணையில் இருதரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் கடைகள் அடைக்கப்பட்டது.
2. கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு
கல்லூரி மாணவியை தாக்க முயன்ற பஸ் டிரைவர் சிறையில் அடைப்பு.
3. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் கடைகள் அடைப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
4. பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு
பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து கறம்பக்குடியில் கடையடைப்பு மற்றும் அனைத்து கட்சியினர், வியாபாரிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.
5. இரட்டை கொலை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் சிறையில் அடைப்பு
திருச்சி கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெகநாதனை கைது செய்தனர்.