“விளாத்திகுளம் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்” முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அறிவிப்பு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளராக இருந்தார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.தி.மு.க. மாநில செய்தி தொடர்பாளராக இருந்தார். அவர் கடந்த 19-ந் தேதி அ.தி.மு.க.வின் மாநில செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சியின் தொண்டராக தொடர்ந்து செயல்படுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் விளாத்திகுளம் மார்க்கெட்டில் மார்க்கண்டேயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இங்கு எண்ணற்ற நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன். விளாத்திகுளம் தொகுதி முழுவதும் தரமான சாலைகளை அமைத்துள்ளேன். வேம்பார், கீழ வைப்பார் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துள்ளேன். வைப்பாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைத்துள்ளேன். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை பெற்று கொடுத்துள்ளேன்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் என்னை சுயேச்சையாக போட்டியிடுமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, இங்கு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன். விரைவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர், விளாத்திகுளத்தில் வியாபாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் ஆதரவு திரட்டினார்.

Related Tags :
Next Story