தொகுதி பிரச்சினைகளை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் - கடலூர் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீரமேஷ் பேச்சு
தொகுதி பிரச்சினைகளை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று கடலூர் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீரமேஷ் பேசினார்.
நெய்வேலி,
தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25-ல் உள்ள தொ.மு.ச. வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திட்டக்குடி சட்ட மன்ற உறுப்பினருமான சி.வே.கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், முத்துக்குமார். இந்திய தேசிய காங்கிரஸ் பெரியசாமி, ராதாகிருஷ்ணன், குள்ளப்பிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருவரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணிவாசகம், சேகர், ம.தி.மு.க. ராமலிங்கம், பிச்சை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமரைசெல்வன், அறிவுடை நம்பி, மருதமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமீமுன் அன்சாரி, திராவிடர் கழகம் துரை.சந்திரசேகர், தாமோதரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சின்னதுரை, அறிவழகன், இந்திய ஜனநாயக கட்சி ராஜேந்திரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி சின்னப்பன், திராவிட இயக்க தமிழர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொது குழ உறுப்பினர்கள், தொ.மு.ச நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி தேர்தல் பணியாற்றி வேட்பாளர் ஸ்ரீரமேசை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முன்னதாக வேட்பாளர் ஸ்ரீரமேஷ் பேசும் போது, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை வெற்றி பெற செய்தால் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன். தொகுதி பிரச்சினைகள் குறித்து எந்தநேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story