மாவட்ட செய்திகள்

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் - எடியூரப்பா திட்டவட்டம் + "||" + We do not always have a coalition with the Janata Dal (S) party - Ediyurappa

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் - எடியூரப்பா திட்டவட்டம்

ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் - எடியூரப்பா திட்டவட்டம்
முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்காமல் நம்பிக்கை துரோகம் செய்தனர் . ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மக்களின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.

வயது 77 ஆக இருந்தாலும், அந்த வயதால் கிடைத்த அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். கவர்னர் பதவி கிடைத்தால் அதை நான் ஏற்கமாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். இங்கேயே இருந்து விவசாயிகளின் நலனுக்காக போராடுவேன்.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் பா.ஜனதா போட்டியிடும். குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். பா.ஜனதா, இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெறாது என்று தேவேகவுடா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி தான் இரண்டு இலக்க எண்களில் வெற்றி பெறாது.

நாட்டின் எல்லைகளை சிறப்பான முறையில் காத்து வருகிறோம். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை மோடி நடத்தியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள்.

அக்கட்சியின் தலைவர்கள் வேண்டுமானால் ஒற்றுமையாக செயல்படலாம். ஆனால் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செல்லமாட்டார்கள். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். 38 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.

பா.ஜனதாவில் இருந்து விலகி நான் தனி கட்சி தொடங்கி தவறு செய்தேன். அதன் பிறகு நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கர்நாடகத்தில் மாநில கட்சிக்கு இடம் இல்லை.

முன்பு பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தப்படி ஆட்சி நடத்தப்பட்டது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

அடுத்த 20 மாதங்கள் ஆட்சி நடத்த பா.ஜனதாவுக்கு தேவேகவுடா, குமாரசாமி வாய்ப்பு வழங்கவில்லை. தேவேகவுடா, குமாரசாமி நம்பிக்கை துரோகிகள். அதனால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் குமாரசாமி நிபுணர். அது அவரது திறமை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் 3 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பிரச்சினை ஏற்படும். அதன் மூலம் இந்த கூட்டணி அரசு கவிழும்.

மக்கள் ஆதரவுடன் குடும்பத்தில் 2, 3 பேர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. இது எல்லா கட்சிகளிலும் உள்ளது. ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர். இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப அரசியலுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேவேகவுடா குடும்பத்தினர் அந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். அனைத்து அதிகாரமும் தங்களுக்கே வேண்டும் என்று செயல்படும் தேவேகவுடா குடும்பத்தினரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
3. பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
4. 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்பு; வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் : முதல்-மந்திரி அறிவிப்பு
கர்நாடகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.