பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு காவிரி ஆற்று மணலுடன் மனு கொடுக்க வந்த விவசாயி


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு காவிரி ஆற்று மணலுடன் மனு கொடுக்க வந்த விவசாயி
x
தினத்தந்தி 23 March 2019 4:00 AM IST (Updated: 23 March 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயி காவிரி ஆற்று மணலுடன் மனு கொடுக்க வந்தார்.

பெரம்பலூர்,

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவின் மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் நேற்று ஒரு துண்டில் காவிரி ஆற்று மணலை எடுத்துக்கொண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இப்படியெல்லாம் வரக்கூடாது என்று கூறி, மணல் வைத்திருந்த துண்டினை அவரிடம் இருந்து கைப்பற்றினர். இதையடுத்து தங்க சண்முகசுந்தரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜாராமிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களிடமும் தொகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த கேள்வியை தேர்தல் ஆணையம் எழுப்பி, அது குறித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Next Story