ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.மணிமாறன் வேட்புமனு தாக்கல் கலெக்டர் சி.கதிரவன் பெற்றுக்கொண்டார்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.மணிமாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுவை கலெக்டர் சி.கதிரவன் பெற்றுக்கொண்டார்.
ஈரோடு,
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உள்ளார்.
இவர் தினமும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெற தயாராக இருந்து வருகிறார். கடந்த 19 மற்றும் 20-ந் தேதி, 22-ந் தேதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியே இருந்தது.
இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். அவருடன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், பா.ஜனதா கட்சி வக்கீல் அணி மாநில செயலாளர் என்.பி.பழனிச்சாமி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கோபால், பா.ம.க. மாநில துணைச்செயலாளர் எம்.பி.வெங்கடாசலம் ஆகியோர் உடன் வந்தனர். முதல் மாடியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் கலெக்டர் சி.கதிரவனிடம் வேட்பு மனுவை வழங்கினார்கள். பின்னர் வேட்பாளர் உறுதிமொழியை ஜி.மணிமாறன் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக பெருந்துறை ரோடு பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அங்கிருந்து வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் வரை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.மணிமாறனுக்கு வயது 53. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பங்களாபுதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். ஜி.மணிமாறன், அ.தி.மு.க. கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். தற்போது காங்கேயம் நகர அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி பிரியா (வயது 47). இவருக்கு பொன்மணி, பொன்மலர் என்று 2 மகள்கள் உள்ளனர். வேட்பாளர் ஜி.மணிமாறனுக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி பிரியா வேட்புமனு தாக்கல் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.கோபால் (32) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கூத்தம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த இவர் நேற்று முதன் முதலில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு இந்த தேர்தலில் முதல் வேட்புமனுவை தாக்கல் செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சேலத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பேராசிரியரான ஏ.அருணாசலம் (62) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர்களிடம் இருந்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.கதிரவன் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, பயிற்சி கலெக்டர் பத்மஜா மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு பெறும் அதிகாரியாக ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளார். அவரிடம் கொடுமுடி பைபாஸ் ரோடு, வையாபுரி செட்டியார் வீதியை சேர்ந்த சித்ரா (40) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் சேர்த்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 5 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதுபோல் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மீண்டும் 25-ந் தேதி (திங்கட்கிழமை), 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.

Related Tags :
Next Story