வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும்: முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் ரங்கசாமி அறிவுரை


வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும்: முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் ரங்கசாமி அறிவுரை
x
தினத்தந்தி 23 March 2019 4:45 AM IST (Updated: 23 March 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும் என்றும், முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி நேற்று காலை கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் அறிவித்தார். புதுவை எம்.பி. தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகனான டாக்டர் நாராயணசாமி போட்டியிடுவதாக அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு டாக்டர் கே.நாராயணசாமி போட்டியிடுகிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு சிறிய வயது இளைஞரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி உள்ளோம் என்ற பெருமையை பெறமுடியும்.

என்னிடம் 100 இளைஞர்களை தாருங்கள். இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். அதைப்போல் இவரும் அதிக அனுபவம் பெற்று மேலும் பல ஆண்டு பணியாற்றும் வாய்ப்பினை தரவேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் கூறும்போதுகூட, முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறி உள்ளார். வயது முதிர்ந்தால் சோர்வு ஏற்படும்.

நமது குறிக்கோள் தனி மாநில அந்தஸ்து பெறுவதுதான். தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வர வாய்ப்பு உள்ளது.

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story