வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக 10 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; வாலிபர் கைது - மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக 10 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; வாலிபர் கைது - மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2019 10:59 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி 10 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும்4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை,

மதுரை பாண்டி கோவில் பகுதியை சேர்ந்த மோகன் மகன் பிரித்விராஜ் (வயது 27). இவருடைய நண்பர் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை கார்த்திக். இவர்கள் 2 பேரும் மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரனிடம் புகார் மனு அளித்தனர்.அதில், நெல்லை மேலப்பாளையத்தில் வெளிநாட்டுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்தோம். இதற்காக ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கொடுத்தோம். ஆனால் அதை பெற்றுக்கொண்ட அந்த நிறுவணம் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை.

இது தொடர்பாக சமீபத்தில் கேட்ட போது பணத்தை திருப்பி தருவதாக கூறினர். ஆனால் குறிப்பிட்டபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பிதரவில்லை என்று புகாரில் கூறிஉள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி 10க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் உசேன்(30) என்பவரை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story