பா.ஜனதா வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள்: அரசியல் தலைவர்களின் வாரிசுகள்
மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. பா.ஜனதா 25 இடங்களிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
மும்பை,
பா.ஜனதா முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் 4 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் நான்கு பேரும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் ஆவர்.
அதன்படி மறைந்த மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன், மறைந்த துணை முதல்-மந்திரி கோபிநாத் முண்டேவின் மகள் பிரீத்தம் முண்டே, ஊழல் புகாரால் மந்திரி பதவியை இழந்த ஏக்நாத் கட்சேவின் மருமகள் ரக்ஷா கட்சே, முன்னாள் மந்திரி விஜய்குமார் காவித்தின் மகள் ஹீனா காவித் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் 4 பேரும் தற்போது எம்.பி.யாக பதவியில் இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story