முதுகுளத்தூர் அருகே ரே‌ஷன்கடையில் கெட்டுப்போன அரிசி வினியோகம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை


முதுகுளத்தூர் அருகே ரே‌ஷன்கடையில் கெட்டுப்போன அரிசி வினியோகம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 March 2019 4:30 AM IST (Updated: 23 March 2019 8:18 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே ரே‌ஷன்கடையில் கெட்டுப்போன அரிசி வினியோகம் செய்யப்பட்டதால் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா விளங்குளத்தூர் ரே‌ஷன்கடையில் பருத்திகுளம் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வினியோகம் செய்யப்பட்ட அரிசி கெட்டுப்போனதாகவும், மஞ்சள் நிறத்தில் உள்ளதாகவும் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து தாசில்தார் மீனாட்சி, வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் ஆகியோர் பருத்திகுளம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக விளங்குளத்தூர் ரே‌ஷன்கடையில் ஆய்வு மேற்கொண்டு நல்ல அரிசி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story