கணினி மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார்


கணினி மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 March 2019 10:45 PM GMT (Updated: 23 March 2019 7:04 PM GMT)

திருவாரூரில் கணினி மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுவதை கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார்.

திருவாரூர்,

நாகை பாராளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,170 வாக்குச்சாவடி மையங்களில் 6,390 அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

பணி ஒதுக்கீடு

இந்த தேர்தல் அலுவலர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்பு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story