மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி.லோகநாதன் ஆய்வு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆய்வு செய்தார்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு போலீசார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். விழாவில் காவடிகளுடன் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் நெரிசலான பகுதிகளை கண்காணிக்க பறக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தநிலையில் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழாவையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆய்வு செய்தார்.
பறக்கும் கேமரா
அப்போது கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி பக்தர்கள் கூடும் இடங்களில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு செய்ய வேண்டும்,
பக்தர்களை ஒழுங்குபடுத்த இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிக்க வேண்டும். தேவையான இடங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து எந்த சூழ்நிலையிலும் சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் விழிப்புடன் போலீசார் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோசப், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் இருந்தனர்.

Related Tags :
Next Story