காஞ்சீபுரம் மாவட்டம், கல்லூரி கருத்தரங்கு


காஞ்சீபுரம் மாவட்டம், கல்லூரி கருத்தரங்கு
x
தினத்தந்தி 23 March 2019 9:45 PM GMT (Updated: 23 March 2019 7:16 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகிலுள்ள கற்பக விநாயகா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் அறிவியல்-பொறியியல் மற்றும் மேலாண்மையில் சமீபத்திய ஆக்கக்கூறுகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

மதுராந்தகம்,

கல்லூரியின் முதல்வர் காசிநாத பாண்டியன் வரவேற்று பேசினார். கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குனர் டாக்டர் மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். இதில் ஆஸ்திரேலியாவின் மெல்போன் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் வணிகவியல் பிரிவின் உபதலைவர் வெங்கடேஷ் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கு மலரை வெளியிட்டு தனது ஆய்வுகளின் முடிவுகளை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். கல்லூரியின் ஆலோசகர் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முடிவில் கல்லூரியின் டீன் சுப்பாராஜ் நன்றியுரை வழங்கினார்.

Next Story