சில்லரை வணிகம் நசுக்கப்படுவதை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பேட்டி
சில்லரை வணிகம் நசுக்கப்படுவதை எதிர்க் கும் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.
சங்கராபுரம்,
சங்கராபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய காலத்தில் வணிகம், விவசாயம், சுயதொழில்கள், வங்கிகள், தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அன்னிய ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது.
இவைகளை மாற்றி அமைத்து சுய தொழில் காக்கவும், சில்லரை வணிகம் நசுக்கப்படுவதை எதிர்க்கும் கட்சிக்கு வணிகர் சங்கம் ஆதரவு அளிக்கும். அந்த கட்சிக்கு வணிகர்கள் வாக்களிப்பார்கள். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் கொடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று பதில் கூறும் கட்சிக்கு வணிகர்கள் வாக்களிப்பார்கள்.
தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனையால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதோடு, பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். ஜி.எஸ்.டி.க்குள் வராத சிறு வணிகர்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக பணம் எடுத்து செல்லும்போது அவர்களுக்கு சலுகை வழங்கிட வேண்டும். ரூ.50 ஆயிரம் என்பதை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அவருடன் மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், மாநில இணைசெயலாளர் மகாலிங்கம், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பிரகாசம், செயலாளர் குசேலன், நிர்வாகிகள் முருகன், மூர்த்தி, சீனுவாசன், சிவகடாட்சம், செந்தில், வேலு, செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story