மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம் + "||" + The old man was found dead near Kanyakumari railway station

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம்

கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த முதியவர் பிணம்
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே முதியவர் பிணம் கிடந்தது. போலீசார் இடையே எழுந்த எல்லை பிரச்சினையால் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே நேற்று காலை 8 மணி அளவில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தவருக்கு 70 வயது இருக்கும் என்று தெரிய வந்தது. அவர் பெயர், ஊர் விவரம், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.


முதியவர் பிணம் ரெயில் நிலையம் அருகே கிடந்ததால், ரெயில்வே போலீசார் தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கன்னியாகுமரி போலீசார் கருதினார்கள்.

கேட்பாரற்று கிடந்தது

யார் வழக்குப்பதிவு செய்வது என்பதில் கன்னியாகுமரி போலீசாருக்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும் இடையே எல்லை பிரச்சினை எழுந்தது. இதனால் முதியவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படாமல் பகல் 3 மணி வரை அதே இடத்தில் கேட்பாரற்று கிடந்தது.

அதன்பிறகு ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தண்டவாளத்தில் வாலிபர் பிணம்: போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்த தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
செந்துறையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்த தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2. நாகூரில் பிணமாக கிடந்த வாலிபர் ஆற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலம் அக்கா கணவர் கைது
நாகூரில் பிணமாக கிடந்த வாலிபர் ஆற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை தொடர்பாக அவரது அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர்.
3. காரிமங்கலம் அருகே பெண் கொலை வழக்கில் என்ஜினீயர் கைது பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயரை காரிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. மேட்டூரில் வெல்டிங் தொழிலாளி கொலை தலையில் காயங்களுடன் முட்புதரில் பிணம் கிடந்தது
மேட்டூரில் வெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். முட்புதரில் பிணம் கிடந்தது.
5. வேளாங்கண்ணி விடுதியில் பெண் பிணம்: கொலை செய்யப்பட்டது அம்பலம் பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு
வேளாங்கண்ணி விடுதியில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவருடைய கணவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.