அம்பானி வீட்டை சீரமைப்பதாக ரூ.17 கோடி மோசடி : முன்னாள் இயக்குனர் மீது வழக்குப்பதிவு
மும்பை கப்பரடே பகுதியில் அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ‘சீ வின்ட்' வீடு உள்ளது. இந்த வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இஷா பில்ட்டெக், இஷா இன்ப்ராடெக் நிறுவனத்தின் இயக்குனராக முகேஷ் ஷா(வயது56) இருந்து வந்தார்.
மும்பை,
முகேஷ் ஷா 1988-ம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென முகேஷ் ஷா பணியை ராஜினாமா செய்துவிட்டு மாயமானார்.
இதையடுத்து புதிய இயக்குனராக பதவி ஏற்றவர் 2 நிறுவனங்களின் கணக்கு விவரங்களை சரிபார்த்தார். அப்போது, முகேஷ் ஷா ‘சீ வின்ட்’ கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறி ரூ.16 கோடியே 90 லட்சத்தை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
அவர் அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் சீரமைப்பு பணிகள் செய்வதாக நிறுவன வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை மற்ற வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி உள்ளார். ஆனால் வீட்டில் சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து கப்பரடே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story