மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவர் கைது + "||" + A man is arrested he send the question to whatsapp

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவர் கைது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவர் கைது
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் மாணவர்களுக்கு அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
தானே, 

தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த 15 மற்றும் 18-ந்தேதிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 2 பாடங்களின் கேள்வித்தாள்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதில், தனது செல்போனில் அந்த கேள்வித்தாளை பார்த்து கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக பிவண்டி மற்றும் நார்போலி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், அந்த பகுதியில் பயிற்சி மையம் நடத்தி வரும் வாஜிர் சேக் (வயது40) என்பவர் சிக்கினார். அவரது செல்போனில் இருந்து தான் மாணவர்களுக்கு அந்த கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் கேள்வித்தாள் வெளியானதில் தேர்வு மைய ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது
திண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது
நாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3. முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவர் கைது
முன்விரோதம் காரணமாக ஆட்டோவை ஏற்றி டிரைவரை கொல்ல முயன்றவரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று சக ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர்.
4. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பாபநாசம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை தாய்- அண்ணன் உள்பட 4 பேர் கைது
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய்- அண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.