தமிழகத்தில் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் கொணவட்டம், மண்டித்தெரு ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் நிலையான ஆட்சியும், திறமையான பிரதமரும் இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டை பாதுகாக்க முடியும். பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனை பிரதமர் மோடியால் தான் சமாளித்து பாதுகாப்பு அளிக்க முடியும். எனவே நிலையான ஆட்சி அமைய மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வரவேண்டும். நாடு பாதுகாப்பாக இருந்தால் சிறப்பான வளர்ச்சி அடையும்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது வேலூர் மாநகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். அதன்மூலம் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வீடு இல்லாத 14 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்பட உள்ளது. மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். கல்விக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே தி.மு.க.வினர் அடி, தடி உள்ளிட்ட அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் இன்னும் ஏராளமான அராஜகத்தில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஹஜ் புனித பயணம் செய்ய ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. அரசு பாதுகாப்பு அரணாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. எதிர்கட்சியினரின் தூண்டுதல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் தினமும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து அ.தி.மு.க. அரசு பேசி சுமூக தீர்வு கண்டது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். எங்கள் கூட்டணியில் வாக்கு வாங்கியுள்ள கட்சிகள் உள்ளன. எனவே 100 சதவீதம் வெற்றி உறுதி.
வாரிசு அரசியலை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அவரது மகன் மு.க.ஸ்டாலினை அரசியலுக்கு அழைத்து வந்தார். தற்போது மு.க.ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார். அதேபோன்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவருடைய மகனை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.
ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண நபர்கள் கூட முதல்-அமைச்சர் ஆகலாம். அதற்கு நானே உதாரணம். கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி கொடுக்கப்படும். வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடக்கூடியவர். அவர் வெற்றி பெற்றால் அவரது கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களை இலவசமாக படிக்க வைப்பார். எனவே அவரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் பா.ம.க., தே.மு.தி.க. பா.ஜனதா, புதிய நீதிக்கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“மத்தியில் 15 ஆண்டுகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் தி.மு.க. இருந்தது. அப்போது நாட்டு மக்களுக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார். அப்போது அவர் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோன்று எவ்வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
ஆனால் இந்த ஆட்சியில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மத்தியில் நமது கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மத்தியில் நிலையான ஆட்சி அமைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக அ.தி.மு.க. மகளிரணி சார்பில் முதல்- அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பி.நாராயணன், காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சுபாஷ் மற்றும் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story