நாடாளுமன்ற தேர்தல் : கர்நாடகத்தில் 18 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல் : கர்நாடகத்தில் 18 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2019 5:00 AM IST (Updated: 24 March 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடகத்தில் 18 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, 

கலபுரகியில் மல்லிகார்ஜூன கார்கேவும், கோலாரில் கே.எச்.முனியப்பாவும் போட்டியிடுகிறார்கள்.

கர்நாடக நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கர்நாடகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 20 தொகுதிகளில் தார்வார், பெங்களூரு தெற்கு ஆகிய தொகுதிகளை தவிர்த்து 18 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், தற்போதைய எம்.பி.க்களான மல்லிகார்ஜூன கார்கே, வீரப்பமொய்லி, கே.எச்.முனியப்பா, பிரகாஷ் உக்கேரி, உக்ரப்பா, துருவநாராயண், டி.கே.சுரேஷ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வர் கன்ட்ரே, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சாமனூர் சிவசங்கரப்பா ஆகியோருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைத்துள்ளது.

அதன்படி, நேற்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வருமாறு;-

1.சிக்கோடி - பிரகாஷ் உக்கேரி

2.பெலகாவி -விருபாக்சி எஸ்.சாதுனாவர்

3.பாகல்கோட்டை -வீணா காசப்பனவர்

4.கலபுரகி (தனி) -மல்லிகார்ஜூன கார்கே

5.ராய்ச்சூர் (தனி) - பி.வி.நாயக்

6.பீதர் -ஈஸ்வர் கன்ட்ரே

7.கொப்பல் -ராஜசேகர் ஹிட்னால்

8.பல்லாரி (எஸ்.டி.) -உக்ரப்பா

9.ஹாவேரி - டி.ஆர்.பட்டீல்

10.தாவணகெரே -சாமனூர் சிவசங்கரப்பா

11.தட்சிண கன்னடா - மிதுன்ராய்

12.சித்ரதுர்கா (தனி) - பி.என்.சந்திரப்பா

13.மைசூரு-விஜய்சங்கர்

14.சாம்ராஜ்நகர் (தனி) -துருவநாராயண்

15.பெங்களூரு புறநகர் -டி.கே.சுரேஷ்

16.பெங்களூரு மத்திய - ரிஸ்வான் அர்சாத்

17.சிக்பள்ளாப்பூர் - வீரப்பமொய்லி

18.கோலார் (தனி) - கே.எச்.முனியப்பா

Next Story