‘தி.மு.க.வினரின் அராஜகத்துக்கு முடிவு கட்டப்படும்’ ஆற்காட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
தி.மு.க.வினரின் அராஜகத்துக்கு முடிவு கட்டப்படும் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆற்காடு,
அரக்கோணம் நாடாளு மன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்காடு பஸ் நிலையத்தில் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நாம் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இது. ‘மெகா’ கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். எதிர்க்கட்சிகள் அமைத் திருப்பது வெற்று கூட்டணி. உதாரணத்துக்கு வைகோ அந்த கூட்டணியில் சேர்ந்திருப்பது. மு.க.ஸ்டா லின் நமது கூட்டணியை கிண்டல் செய்கிறார். நமது கூட்டணி வாக்கு வங்கி உள்ள கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணி.
மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய இந்த கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. அண்டை நாடுகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு நமது நாட்டில் அமைதியை சீர்குலைக் கிறார்கள். அதனால் எதற்கும் அஞ்சாத பிரதமர் தேவை. அப்படிபட்ட பிரதமரை தேர்ந்தெடுக்கத்தான் இந்த கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாததால் இப்போது நமது கூட்டணியை பற்றி பேசுகிறார்கள். கோடநாடு வழக்கில் 2 குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் போது அவர் களை ஜாமீனில் எடுக்கும் தி.மு.க. அதன் பின்புலம் என்ன என்று பார்க்க வேண்டும்.
அந்த வழக்கில் முதல் - அமைச்சரை பற்றி தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அதற்கு அவர் அனுபவித்தே தீரவேண்டும். இந்த வழக்கில் ஸ்டாலின் சம்பந்தப்பட்டிருப் பாரோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். அந்த சந்தேகத்தை போக்குவது அரசின் கடமை.
சாதிக்பாட்சாவின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடாநட்பு கேடாய் முடியும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளார். சாதிக்பாட்சா யாருடன் கூட்டு வைத்திருந்தார். ஸ்டாலின்கூட நட்பு வைத்திருந்தார். முன்னாள் மத்திய மந்திரி அ.ராசாவுடன் நட்பு வைத்திருந்தார். அவர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். எனவே அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து ஜெயலலிதாவின் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். நீதியின் அடிப் படையில் அவர்கள் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.
ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் எத்தனை போராட்டங்கள். அனைத்து போராட்டங்களுக்கும் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. 2 வருடங்களாக சந்தித்த போராட்டங்கள் மூலம் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இனி எத்தனை போராட்டங் களை தூண்டி னாலும் அதை சமாளிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது. அ.தி.மு.க. கட்சியை உடைக்கவும், இந்த ஆட்சியை கவிழ்க்கவும் திட்டமிட்டார்.
சட்டங்கள் இயற்றப்படும் சட்டமன்றத்தில் ஆட்டம் பாட்டம் போட்டார்கள், சபாநாயகரின் கையை பிடித்து இழுத்தார்கள். இப்படி அராஜகம் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது. அவர்களுடைய அராஜகத்துக்கு இந்த அரசு முடிவுகட்டும்.
பொங்கல் பரிசாக அனைத்து மக்களுக்கும் ரூ.1,000 கொடுத்தது அவர் களுக்கு பொறுக்க முடிய வில்லை. ஒரு ஆட்சியென்றால் மக்களுக்கு நல்லது செய்வது தான். ஆனால் தி.மு.க. அதை தடுக்கிறது. ஏழை தொழிலாளர் களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அதற்கும் நீதிமன் றத்தில் ஸ்டாலின் தூண்டு தலின் பேரில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது. அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க.வினர் புகார் செய்து தடுத்துவிட்டார்கள். தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக அதிகரிக்கப்படும்.
திருவண்ணாமலையில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டா லின் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முத்து முத்தான திட்டங்கள் இருப்பதாக பேசியிருக்கிறார். நான் படித்து பார்த்தேன் அப்படி எந்த திட்டமும் இல்லை. 15 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்து அவர்களுடைய குடும்பத்தினர் அமைச்சர் களாக இருந்தார்கள். அப் போது காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டார்களா?, பாலாறு பிரச்சினைக்கு தீர்வு கண்டார் களா? அல்லது முல்லை பெரியாறு பிரச்சி னைக்கு தீர்வு கண்டார்களா?. அவர் கள் கொடுப்பது எல்லாம் பொய்யான தேர்தல் அறிக்கை.
அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, 1.80 கோடி குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. தி.மு.க. நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறியிருந்தார் கள். எங்காவது நிலத்தை காட்டினார்களா?. விலை மதிப்புமிக்க இடங்களை தி.மு.க.வினர் அபகரித்து அவர்கள் பெயரில் பட்டா போட்டுக் கொண்டார்கள். நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கி அவர்கள் ஆக்கிரமித்த நிலங்களை மீட்டு தந்தது ஜெயலலிதா ஆட்சி.
மத்தியில் வலிமையான, திறமையான ஆட்சி அமைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.
அதைத் தொடர்ந்து ராணிப் பேட்டை முத்துக்கடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியை பார்த்து, ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள வைகோ, ஸ்டாலினை உயிருள்ளவரை முதல் - அமைச்சராக வரவிட மாட்டேன் என கூறினார். ஆனால் அவரை இன்று தி.மு.க. கூட்டணியில் சேர்த்து கொண்டுள்ளார். தி.மு.க. கூட்டணி பதவி சுகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. எங்களுக்கு மக்களின் நலன்தான் முக்கியம். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருப்போம். எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப் போம். எதை ஆதரிக்க வேண்டுமோ அதை ஆதரிப்போம்’ என்றார்.
ஆற்காடு, ராணிப்பேட்டை பிரசாரத்தின் போது முதல்- அமைச்சருடன் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி உடனிருந்தார்.
பிரசாரத்தின் போது வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முகம்மது ஜான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா ளர் முரளி, ராணிப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எம்.சுகுமார், ராணிப் பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கே.மணி, வாலாஜா நகர செயலாளர் மோகன், மேல்விஷாரம் நகர செயலாளர் இப்ராகிம் கலிலுல்லா, வாலாஜா ஒன்றிய செயலாளர் பூங்காவனம், அம்மூர் பேரூராட்சி செயலா ளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் ஷாபுதீன், ராணிப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜே.பி.சேகர், ராணிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கே.பி.சந்தோஷம் மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., புரட்சி பாரதம் உள்பட கட்சிகளை சேர்ந்த நிர்வாகி கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story