மாவட்ட செய்திகள்

காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி + "||" + Sub-inspector who refused to marry The villagers who succumbed to poison have been suicidal

காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி

காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்ய மறுப்பு: விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலை முயற்சி
திருவோணம் அருகே விஷம் குடித்து கிராம நிர்வாக பெண் அதிகாரி தற்கொலைக்கு முயன்றார். அவர் காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


மருத்துவமனையில் சிகிச்சை

இதனால் மன வேதனை அடைந்த பெண் கிராம நிர்வாக அதிகாரி நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் நேற்று காலை மருத்துவ மனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம், தற்கொலை முயற்சிக்கு காதல் விவகாரத்தை காரணமாக கூறக்கூடாது என கூறி சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

விசாரணை

பெண் கிராம நிர்வாக அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதலித்த சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தற்கொலையை தவிர்ப்போம்
தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
4. சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை
சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
5. ராமநாதபுரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை
ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.