மும்பை- புனே நெடுஞ்சாலையில் பஸ்சில் கொண்டு சென்ற ரூ.44 லட்சம் நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
பஸ்சில் பயணி கொண்டு சென்ற ரூ.44 லட்சம் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பயணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை,
நாடாளுமன்ற தேர் தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மராட்டியத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சம்பவத்தன்று மும்பை- புனே நெடுஞ்சாலையில் காலாப்பூர் சுங்கச்சாவடியில் வந்து கொண்டிருந்த ஒரு பஸ்சில் ஏறி பறக்கும்படை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது, ஒரு பயணிகளிடம் அதிகளவில் தங்க நகைகள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டனர்.
ஆனால் அந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் அந்த நகைகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.44 லட்சம் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணைக்காக அந்த பயணியையும் பிடித்து சென்றனர். அவர் அந்த தங்க நகைகளை கோவாவில் இருந்து மும்பைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த நபரிடம் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story