பிரசாரம் தொடங்காத வேட்பாளர்களால் களையிழந்து காணப்படும் பெரம்பலூர் தொகுதி
வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் தொடங்காததால் பெரம்பலூர் தொகுதி களையிழந்து காணப்படுகிறது.
பெரம்பலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்களது தோழமை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியும், தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தரும், மேலும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரனும், நாம் தமிழர் கட்சியில் சாந்தி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன் ஆகியோர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 76 ஆயிரத்து 499 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெரம்பலூர் (தனி) சட்ட மன்ற தொகுதியில் தான் அதிகப்படியான 2 லட்சத்து 86 ஆயிரத்து 397 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் இதுவரைக்கும் எந்த வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கவில்லை.
மாவட்ட தலைநகரும், தொகுதியின் தலைநகருமான பெரம்பலூரில் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ஒரு சில கட்சிகளின் சார்பில் பெயரளவுக்கே நடத்தப்பட்டது. மற்ற சட்டமன்ற தொகுதிகளில் இந்த வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பெரம்பலூரை வேட்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை. பெரம்பலூரில் ஆங்காங்கே கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை அலுவலகங்கள் கூட, திறப்பு விழாவிற்காக காத்து கொண்டிருக்கிறது. மேலும் ஓட்டு கேட்டு உலா வரும் கட்சிகளின் பிரசார வாகனமும் பெரம்பலூரில் எங்கும் தென்படவில்லை. சுவர் விளம்பரங்களும் இல்லை. மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கட்சிகளின் துண்டுகள், வேட்டிகளையும் கட்சியினர் வாங்குவதற்கு முன்வரவில்லை. தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழ்நிலையில், பெரம்பலூரில் தேர்தல் நடப்பதற்கான எந்தவித அறிகுறியும் காணப்படாததால், பெரம்பலூரில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்காமல் உள்ளனர். இதனால் பெரம்பலூர் தொகுதி களையிழந்து காணப்படுகிறது.

Related Tags :
Next Story